நான் சமிபத்தில் ரசித்த வீடியோ இது ...!
இந்த வீடியோ பார்த்த பிறகு சீட் பெல்ட் போட மறக்கமாடீங்கனு நினைகின்றேன்
இந்த விளம்பர படத்தில் நடித்துள்ள அனைவரும அருமையாக நடிதுள்ளர்கள்
வியாழன், 8 ஜூலை, 2010
செவ்வாய், 6 ஜூலை, 2010
மூன்றாவது கண் - கேமராதாங்க!
சுசீந்தரம் கோயில் குளம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரி
கன்னியாகுமரி மாத்தூர் தொட்டி பாலம் மேலிருந்து எடுத்தது
சூரிய அஸ்தமனம் - திருமழிசை அருகே எடுத்தது ( இப்ப நிறைய சீரியல் ஷூட்டிங் இங்கதான் எடுகரங்கன்னு நினைக்கிறன் )
தடா அருகில் உள்ள ஒரு சிறிய அழகிய நீர்வீழ்ச்சி
மற்றுமொரு சூரிய அஸ்தமனம் கன்னியாகுமரியல் எடுத்ததுஎன் மூன்றாவது கண்ணின் பதிவுகளை பார்த்ததற்கு மிக நன்றி!
இப்படிக்கு
செந்தில்
நான் அவர் இல்லை
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இன்னும் ஓர் இரவு...

என் அலுவலக நண்பர் அவர் கவிஞரும் கூட ...
அவர் எழுதிய ஒரு கவிதை இதோ
இன்னும் ஓர் இரவு...
சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே உணவருந்த வேண்டும் என்கிற நினைவே...
காலை உணவை மறுக்க செய்கிறது...
நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை தேடி தேடியே தொலைந்து போகிறது எனது பகலும் சில நினைவுகளும்...
யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய் இரைச்சல் நிறைந்த மனதின் தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்...
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்....
போனதாய் நினைக்கும் வேளையில்.....
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்....
சிறு கண்ணீரும் சில கனவுகளும்....
எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும் குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது....
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு....
- சசிதரன்
என் முதல் முயற்சி
நான் ப்ளாக் வாசகனாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
எனக்கும் ப்ளாக் எழுதனும்னு ஆசை வந்து ஆறு மாசம் ஆச்சு ஆனா இப்ப தான் என்னால எழுத முடிந்தது.
என் ப்ளாக் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
என்னுடைய அனுபவங்கள்,பயணங்கள், தகவல்கள், போன்ற சிலவற்றை என் போன்ற ப்ளாக் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே எழுத ஆரம்பிக்கின்றேன்.
நன்றி - கூகுள்
எனக்கும் ப்ளாக் எழுதனும்னு ஆசை வந்து ஆறு மாசம் ஆச்சு ஆனா இப்ப தான் என்னால எழுத முடிந்தது.
என் ப்ளாக் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
என்னுடைய அனுபவங்கள்,பயணங்கள், தகவல்கள், போன்ற சிலவற்றை என் போன்ற ப்ளாக் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே எழுத ஆரம்பிக்கின்றேன்.
நன்றி - கூகுள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)